வியாழன், 12 பிப்ரவரி, 2015

குரு பாடம்..


தேடினேன் …. தேடினேன்…
தேடிப்போகும் இடத்திலெல்லாம்
நம்மிடம்
இருப்பதை எதையாவது தொலைத்து வரவேண்டியே இருந்திருக்கிறது….
எனவே நீ
முதலில் தொலைப்பதை நிறுத்து..
பின் உனக்கு
தேடல் தேவையற்றதாகும்…
உன்னுள் உறை..
உன்னுடனே இரு…
உனக்குள்ளேயே தொலைந்துபோ..
அது விதையாய்
உன்னுள் முளைத்து நாளை விருட்சமாகும்…
அந்த இறை யெமக்கு உணர்த்தியது…
இறை உணர்த்தியபடியே எமக்குள் தொலைந்த
’நான்’
முளைத்திருக்கிறேன்…
அது என்னைத்தொலைத்து வேர் அறுக்கவே…
ந.தென்றல்சக்தி….